ஈரோடு அர்பன் பாங்கு அறிக்கைப் பத்திரக் குறிப்பு. குடி அரசு - குறிப்புரை - 12.11.1933 

Rate this item
(0 votes)

ஈரோடு அர்பன் பாங்கியானது சுமார் 20 வருஷத்துக்கு முன் இவ்வூரில் ஸ்தாபிக்கப்பட்ட பொழுது அதற்கு பெரிதும் பார்ப்பனரல்லாத மக்களே பிரயத்தனக் காரராகவும், ஆதரவுக்காரர்களாகவும் இருந்தாலும் அது நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும், ஆதிக்கத்துக்கும் உள்ளாகி பாங்கி சிப்பந்திகளும், நிர்வாகிகளும் பார்ப்பன அக்கிரமமாகவும் பார்ப்பன நன்மைக்கு ஒரு கோட்டையாகவும் வந்து முடிந்ததுடன் மற்ற ஊர்ப் பொதுக்காரியங்களிலும் பார்ப்பன ஆதிக்கத் தைப் புகுத்துவதற்கு பாங்கியின் செல்வாக்கை உபயோகப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் பிறகே சமீப காலத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இதையறிந்து பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிவந்ததின் பயனாய் சிருகச்சிருக பார்ப்பன ஆதிக்கம் குறையத் தலைப்பட்டு இப்போது இந்த இரண்டு வருஷமாய் அப்பாங்கின் நிர்வாகத் தைப் பொருத்தவரை அடியோடு பார்ப்பனரல்லாதார் கைக்கு வந்திருக்கின்றது என்றே சொல்லலாம். 

இதன் பயனாய் அப்பாங்கின் நல்ல நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாய் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்பாலதன்று. பதவி இழக்க நேரிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆளுகளையே பிடித்து அவர் களுக்கு பூச்சுற்றி விட்டு கலகம் செய்ய விடுதல் முதலாகிய காரியங்கள் முதல் தினம் ஒரு வசவு நோட்டீஸ் பிரப்பித்தல் வரை அநேக சூழ்ச்சிகள் செய்ததுடன் பாங்கிக்கு நாணயக் குறைவையும், கெட்டபெயரையும் உண்டாக்க எவ்வளவோ விஷமப் பிரசாரமும் செய்துவந்தார்கள். ஆனால் பார்ப்பனர்களின் இவ்வளவு சக்திகளையும், சூக்ஷிகளையும் நன்றாய் அறிந்தவரும், எதற்கும் அஞ்சாத நெஞ்சையுடையவரும். எவ்வித நஷ்டத் துக்கும், பழிப்புக்கும், மிரட்டலுக்கும் சிறிதும் பின்வாங்காதவரான தோழர் எம். சிக்கையா அவர்கள் துணிவுடன் பாங்கின் தலைமைப் பதவியை யேற்று கலங்காமல் இருந்து நிர்வாகம் நடத்திவந்ததின் பயனாகவும் மற்றும் அவருக்கு உதவியாக இருந்து எதற்கும் பயப்படாமல் இருக்கும்படி தைரியமூட்டி உற்சாகத்தை அளித்துவந்த டைரெக்டர்களான தோழர்கள் வி.வி.சி.வி. பெரியசாமி முதலியார், சா.ராமசாமி நாயக்கர், வி.வி. 

சிஆர். முரு கேச முதலியார், எஸ்.வி.சிராமலிங்க முதலியார், கே.எம். சீனிவாசம்பிள்ளை , என்.எம்.ஷண்முகசுந்திர முதலியார். ஈ.எஸ்.கோவிந்தசாமி நாயுடு, கே.காதர் சாயபு, ஈஓய்உமர்நவாஸ்கான் சாய்பு, வி.வெங்கடசாமி ரவுத் ஆகியவர்களது உதவியாலும் இவ்வளவு சூக்ஷிகளும் கலகங்களும் சிவில் கிரிமினல் விவகாரங்களும் விஷமப்பிரசார துண்டுப் பிரசுரங்களும் டிபாசிட்டுகாரர் களுக்கு பொய் தகவல்களைக் கொடுத்து டிபாசிட்டுகளைத் திருப்பிவாங்கிக் கொள்ளச் செய்தல் முதலிய சில்லரை விஷமங்களும் ஆகியவைகளில் ஒரு சிறிதும் பயன்படாமல் போனதுடன் பாங்கியின் நிலைமையானது முன்னை விட ஒவ்வொரு துரையிலும் அபிவிருத்தி அடைந்திருப்பதோடு சில அயிட்டங்களில் எப்போதையும்விட மேலான நிலையை அடைந்திருக்கின்றது. 

எப்படியெனில் இவ்வருஷம் நமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கையைப் பார்த்ததில் அடியில் கண்ட குறிப்புகள் காணக் கிடைத்தன. அதாவது: 

பாங்கியால் வாங்கப்பட்டிருக்கும் டிபாசிட் துகைகள் தற்போதிய நிர்வாக சபையார் காலத்தில் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஷை யார் நிர்வாக ஆரம்பத்தில் டாங்கில் டிபாசிட்டுகளின் துகை ரூ.3.23,000 ஆக இருந்தது. ஆனால் 30-6-33ல் ரூபாய் 4,00,000க்கு அதிகரித்திருக்கிறது. பாங்கு ஆரம்பமுதல் எப்பொழுதாவது இவ்வளவு டிபாசிட்டு துகை இருந்ததாக இந்த பாங்கு அறிக்கை ஸ்டேட்மெண்டிலிருந்து காணவே முடியவில்லை. இதன் காரணம் பாங்கு மீது மாத்திரமல்லாமல் பாங்கை நிர்வகிப்பவர் மீதும் இந்த பாங்கானது மெம்பர்களுக்கும். மெம்பரல்லாத டிபாசிட்டுத்தாரர்களுக்கும் உள்ள நம்பிக்கை யென்றே சொல்லவேண்டும். ஒரு பாங்கு செவ்வனே நடைபெற்று வருவதற்கு உள்ள முக்கிய அரிகுறி தவணைகடந்த கடன்களின் துகையின் குறைவே ஆகும். பார்ப்பன ஆதிக்கத்தில் அதாவது தற்போதிய டைரக்டர்கள் பொறுப்புவைக்கும் முன்பு சுமார் ரூபாய் 65000 வரை பல வருஷங்கள் தவணை கடந்த கடன் துகை இருந்துவந்தது. 

ஆனால் சென்ற வருஷ இறுதியில் தோழர் சிக்கையா அவர்கள் தலைமையில் கொண்ட பார்ப்பனரல்லாத டைரெக்டர்கள் நிர்வாகக் கால மாகிய (30-6-33) ல் ரூ.36, 297 க்கு குறைந்து போயிருக்கிறது. சுமார் 2 வருஷங் களுக்கு முன்பு இருந்த நிலைமையை விட ஷ காலத்தில் பண நெருக்கடி அதிகரித்தே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் சிறத்தையுடன் பாங்கு நன்மையை உத்தேசித்து தாச்சண்யமின்றி சாமர்த்தி யத்துடன் அவைகளை வசூலித்து பாங்கின் நிலைமையை மேன்மையுறச் செய்த சிறப்பு நிர்வாக சபையாருக்கும், விசேஷமாக தலைவர் தோழர் எம். சிக்கையா அவர்களுக்கும் உரியது. தவணை கடந்த கடன்கள் விஷயத்தில் பாங்கின் நிலைமை இந்த ஜில்லாவிலும், இன்னும் இம் மாகாணத்திலுள்ள பல ஐக்கிய பாங்குகளைக் காட்டிலும் மேன்மையதாக இருக்கிறது. 30-6-33ல் ஷை கடன்களின் துகை மொத்தக் கடன் நிலுவையில் 100க்கு 16 விழுக்காடு தான் ஏற்பட்டிருந்தது. இவ்வளவு வட்டி குறைந்த காலத்திலும் வழக்கம் போல் வட்டி கொடுக்கப்பட்டதுடன் வழக்கம்போல் காப்புத்துகையும் ஒதுக்கிவைக்க முடிந்திருக்கிறது. 

பாங்கின் பாதுகாப்பு திரவியம் (Reserve Fund) நாளது தேதியில் ரூ.32,808க்கு அதிகரித்திருக்கிறது. மெம்பர்களின் சங்கியையும் அதிகரித்து தற்போது 1,882 மெம்பர்கள் ரூ.89.599 செல்லான பாங்குத் துகையு டனிருக்கிறார்கள். பாங்கின் முதலீடு (Working Capital) ரூபாய் 4,41,413 லிருந்து ரூ.5,15,477க்கு அதிகரித்திருக்கிறது. இவ்வளவு துகை பாங்கு ஸ்தாபிக்கப் பட்டது முதற்கொண்டு இருந்ததில்லை யென்றும் தெரியவருகிறது. 

பாங்கின் புதிய கடன்கள் கொடுக்கும் விஷயத்தில், தற்போதுள்ள வியாபாரமந்தம், பணநெருக்கடி இவைகளை உத்தேசித்து, கடன் மனுக் களை ஊன்றி பரிசீலனைசெய்ய ஏற்பட்டதால் துகை சிறிது குறைய அதன் காரண மாக லாபமும் முன் வருஷத்தைக் காட்டிலும் சற்று குறையக்காரணம் ஏற்பட்டது. இந்நிலைமை எல்லா ஐக்கிய பாங்குகளிலும் இன்னும் இதர பாங்குகளிலுமே காணப்படுகிறது. என்றபோதிலும் முன் வருஷங்களைப் போலவே மெம்பர்களுக்குப் பங்குத்தொகையின் பேரில் 100க்கு 9வீதம் டிவி டெண்டுகொடுக்க போதுமான லாபமிருந்தது. 

நமது ஈரோடு அர்பன் பாங்கு பார்ப்பனரல்லாதார் கைக்கு நிர்வாகம் வந்ததின்பயனாய் மேல் குறிப்பிட்டபடி எத்தனையோ சூட்சிக்கும், தொல்லைக்கும். விஷமப் பிரசாரத்துக்கும் ஆளாக நேர்ந்தாலும் தோழர் சிக்கையா அவர்களது முயற்சியாலும், மற்ற டைரக்டர்களது ஆதரவாலும் பல துரைகளிலும் என்றும் இல்லாத அபிவிருத்தியடைந்தும் இந்த ஜில்லாவிலும், இந்த மாகாணத்திலும் உள்ள அநேக பாங்குகளைவிட மேன்மை யாயும் இருந்து வந்திருப்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைவதுடன் பிரசி டெண்டையும், டைரெக்டர்களையும் பாராட்டுகின்றோம். 

குடி அரசு - குறிப்புரை - 12.11.1933

Read 52 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.